இயற்கையின் எழிலில்
இறைவ்னைக் காண்போம் (22) சின்ன குக்குருவன்
சின்ன குக்குருவன்
என்று ஒரு குருவி. ஆங்கிலத்தில் இதை Coppersmith or Crimson-breasted
barbet
என்பர். விஞ்ஞான ரீதியாக இதற்களிக்கப்
பட்ட பெயர் Meglaima haemacephala
என்பதாகும்.
சின்னக் குக்குருவன்
சிட்டுக் குருவியின் பருமன் கொண்ட இந்தக் குருவியின்
பிரதான நிறம் கரும் பச்சை. முன் தலையிலும்
மேல் மார்பிலும் இரத்தச் சிவப்பான சிறகுகளும், கழுத்திலும் கண்களுக்கு மேலு கீழும்
வெள்ளை சிறகுகளும் இருக்கும். கீழ்
மார்பு, வயிறு இவற்றில் சற்றே மஞ்சள் கலந்த பச்சை நிறம் மற்றும் வெள்ளை சிறகுகளில்
நடு நடுவே கருப்பு சிறகுகளுமாக இருக்கும்.
பட்ட மரக் கிளையில் துளைத்து செய்யப் பட்ட கூடு
(http://en.wikipedia.org/wiki/Image:Coppersmith_Barbet_I_IMG_1813.jpg)
சின்ன குக்குருவன் தனது அலகினால் ஒரு பட்டடுப்
போன மரக்கிளையில் சுமார் ஒன்றரை
அங்குல விட்டமுள்ள துளை செய்து தன்
கூட்டினைத் தயார் செய்யும். ஒரு
தடவை தயார் செய்த கூட்டினையே மீண்டும் மீண்டும் வருடா வருடம் உபயோகிக்கும், அந்தக்
கிளையை யாரும் வெட்டாதிருந்தால்.
சின்னக் குக்குருவனுக்கு ஜியாமெட்ரி பாக்சிலிருந்து
காம்பெஸை எடுத்து மரத்தில் வட்டம் போட்டுத் தருவது யார்? இவ்வளவு அழகாக வட்ட
வடிவில் துளை போடுகிறதே! நம்மால் முடியுமா காம்பஸ்
துணை இன்றி மரத்தில் இவ்வளவு அழகாக வட்டம் போட?
‘பார்பெட்’ என்று இக்குருவிக்கு
பெயர் வரக் காரணம் இதன் மேல் அலகின் அடிப்புறம் காணப் படும் பூனை மீசை போன்று சில
ரோமங்கள் இருப்பதால்தான் (‘பார்ப்’ என்றால் ஆங்கிலத்தில் முள் என்று பொருள்).
ஆல்,
அரசு போன்ற மரங்களில் அதிகமாக வாழ்ந்தாலும் குக்குருவனை தோட்டங்களிலும்
சாலைகளிலும் உள்ள பெரிய மரங்களிலும் காணலாம்.
தப்பு… தப்பு. காணலாம் என்று சொல்வதைவிட கேட்கலாம் என்று
சொல்வதே சரியாகும். காரணங்கள்
இரண்டு. ஒன்று, இதன் நிறம் இலை கிளைகளோடு
ஒன்றி விடுவது. இரண்டு, இதன் குரல். ஒரு செப்புப் பாத்திரம் செய்யும் தொழிலாளி
செப்புத் தகட்டினை சுத்தியால் தட்டும்போது எற்படுத்தும் சத்தம் போல ‘டோங்க்... டோங்க்... டோங்க்...’ என்ற ஒலியினை
எழுப்பும் சின்ன குக்குருவன், கத்தும் போது தனது தலையை நாலா புறமும் திருப்புகிறது. அதனால் இது எழுப்பும் குரலும் பல திசையில்
இருந்து வருவது போலத் தோன்றும். நாமும்
குரல் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் இந்தக் குருவி இருக்கும் இடம் தவிர
மற்ற எல்லா இடங்களிலும் இதைத் தேடுவோம்.
ஆங்கிலத்தில்
‘Ventriloquist’ எனறு அழைக்கப் படுகிறார்களே அவர்கள் எப்படி தனது
வாயோ அல்லது தொண்டையோ சிறிதும் அசையாமல்
சத்தம் எங்கிருந்தோ வருவது போன்று குரல் எழுப்புவார்களோ அது போலத்தான் சின்ன குக்குருவனும் கத்தும். இந்தக் குருவியின் சிறப்பு அம்சமே இதுதான்.
இயற்கையின் எழிலில்தான் எத்தனை திகைப்பூட்டும் ரகசியங்களை
வைத்திருக்கிறாய் இறைவா!
நடராஜன் கல்பட்டு
Super information.. Really amazed by the accuracy of the circular hole this bird creates..
ReplyDeleteRam