இயற்கயின் எழிலில் இறைவனைக்
காண்போம் (20) பொன்னு தொட்டான்
பஞ்சவர்ணக்
கிளி பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள், பார்த்து இருப்பீர்கள். ஒன்பது வர்ணக் குருவி பார்த்திருக்கிறீர்களா?
பொன்னுத் தொட்டான் என்று ஒரு குருவி. ஆங்கிலத்தில் இதன் பெயர் Pitta (Scientific name – Pitta
brachyura). ஹிந்தியில் இதன் பெயர்
நவ்ரங் அதாவது ஒன்பது வர்ணம்.
தரையில்
இரை தேடும் பொன்னுத் தொட்டான்
(http://upload.wikimedia.org/wikipedia/commons/7/7d/Pitta_brachyura.jpg)
எண்ணிப்
பார்த்தீர்களா ஒன்பது வர்ணங்களை? வான
வில்லின் ஏழு நிறங்களுடன் கருப்பு வெள்ளை இரண்டும் சேர்ந்து ஒன்பது ஆகிறது.
பொன்னுத்
தொட்டானுக்கு தமிழ் நாட்டிலே இன்னும் நான்கு பெயர்கள் உள்ளன. அவை ஆறுமணிக் குருவி, தோட்டக் கள்ளன், காசிக்
கட்டிக் குருவி, கஞ்சால் குருவி என்பவை ஆகும்.
பொன்னுத்
தொட்டான் தமிழ் நாட்டில் நம் தோட்டங்களுக்கு வருடா வருடம் குளிர் நாட்களில் வரும்
ஒரு குருவி. மற்ற
நாட்களில் இது வட இந்தியாவுக்கும் மத்திய பிரதேசத்திற்கும் சென்று விடுகிறது.
இலைகளிடையே பொன்னுத்
தொட்டான்
(http://www.kolkatabirds.com/indianpitta8kol.jpg)
இது
சுலபமாக நம் கண்களில் படுவதில்லை. காரணங்கள்
இரண்டு. ஒன்று, இந்தப் பறவை சாதாரணமாக மற்ற பறவைகளைப் போல்
உயரப் பறப்பதில்லை. இலைகள் அடர்ந்த கிளைகள்
இடயே கிளைக்குக் கிளை சென்று கொண்டிருக்கும்.
இரண்டு, இது இரை தேடும்போதோ
தரையிலேயே தத்தித் தத்திச்
சென்று இலை சரகுகளுக்கு கீழே உள்ள புழு
பூச்சிகளைத்தேடி உண்ணும். பொன்னுத்
தொட்டான் அவசியம் வரும் போது சற்றே பறந்து தாழ உள்ள மரக் கிளைகளில் உட்காரும். இதன் வண்ணம் கிளைகளில் உள்ள இலைகள் மற்றும் தரையில்
கிடக்கும் இலை சரகுகளுடன் ஒன்றி விடுவதால் இது நம் கண்களுக்குப் புலப் படுவதில்லை.
இறைவன் படைப்பான
இயற்கையில்தான் எத்தனை விதங்கள்! எத்தனை வண்ணங்கள்!
நடராஜன் கல்பட்டு
(பின்
குறிப்பு: எங்கள் வீட்டுத்
தோட்டத்திற்கு வருடா வருடம் ஒரு பொன்னுத் தட்டான் வந்து கொண்டிருந்தது. என்ன காரணமோ இவ்வருடம் (2010) ஏப்ரல் மாதம் வட
இந்தியாவுக்குப் பயணிக்காமல் தங்கி விட்டது.
சுட்டெரிக்கும் வெய்யில் தாங்காமல் ஒரு நாள் செத்து விழுந்து விட்டது. இனி எங்களுக்கு வீட்டில்
இருந்தபடியே பொன்னுத் தொட்டானைப் பார்க்கும் இன்பம் கிட்டாது. வீட்டுத் தோட்டத்திலே பறவைகள் குடிக்க / குளிக்க ஒரு சிறிய நீர்த்
தொட்டியை முன்னரே அமைத்திருந்தால் இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ?)
என்ன அழகு...
ReplyDeleteபின் குறிப்பு பற்றி... சிறிது வருத்தம் தான்...
தங்கள் அன்புக்கு கட்டுப்பட்டு இங்கேயே இருந்திருக்கும்.. :)
ReplyDeleteA very beautiful bird indeed..
Ram
பின்னூட்டத்திற்கு நன்றி அன்பு தனபாலன்.
ReplyDeleteபின் குறிப்பு பற்றி... சிறிது வருத்தம் தான்..
என்ன செய்ய? உண்மை கசக்கும் என்பார்களே அது இது தானோ?