Friday, 21 December 2012


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : 11. தேனீ தின்னும் பச்சைக் குருவி 


தேனீக்களைத் தின்று வாழ்வதெற்கென்றே ஒர் பறவையைப் படைத்திருக்கிறான் ஆண்டவன்.  அதுதான் தேனீ தின்னும் பச்சைக் குருவி.



இதன் வண்ணத்தைப் பார்த்து சிலர் இப் பறவையை கிளியின் குஞ்சோ என்று எண்ணிவிடக் கூடும்.  ஆனால் இதன் அலகும் வால் சிறகுகளின் நுனியில் கம்பி போல நீண்டிருக்கும் நடுச்                                 சிறகுகளும் இது கிளிக் குஞ்சல்ல என்பதைக் காட்டி விடும்.  

இந்தக் குருவி கிராமப் புரங்களில் தந்தி, மின் கம்பிகளின் மீதோ, வேலிக் கம்பிகளின் மீதோ அல்லது செடிகளின் ஒரு உயர்ந்த கிளையின் மீதோ உட்கார்ந்திருக்கும்.  திடீரென அது சிறு தூரம் பறந்து சென்று பின் திரும்பி வந்து முதலில் உடகார்ந்திருந்த இடத்திற்கே வந்து சேரும்.  அப்போது பார்த்தால் அதன் அலகில் ஒரு தேனீ இருக்கும்.  தலையை சற்றே தூக்கி இரண்டு மூன்று விழுங்கலில் தேனீயைத் தின்னும்.

ராம பாணம் குறி தப்பாது என்பார்கள்.  வல்லரசுகள் படைத்த ஏவு கணைகள் கூட சில சமயம் குறி தப்பலாம்.  ஆனால் தேனீத் தின்னியின் குறி ஒரு நாளும் தப்பாது.

பல தேனீக்களை உண்ட சில நேரத்துக்குப் பின் தேனீத் தின்னும் குருவி அதன் வாயினால் சுமார் ஒரு சென்டிமீடர் நீளம் உள்ள நீண்ட கோழி முட்டை வடிவிலான ஒரு கருப்புக் கட்டியை வெளியே துப்பும். அதைக் கையில் எடுத்து பார்த்தால் அதில் அப் பறவையால் ஜீரணிக்க முடியாத தேனீயின் இறக்கை, கால்கள் மற்றும் உடல் கூடு இவை இருக்கும்.


வினாடிகளில் வெளி வரப் போவது ஜீரணிக்க முடிபியாத பகுதிகள்.
                                                          
தேனீத் தின்னிகள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் பேன் போன்ற சிறு பூச்சிகளிடம் இருந்து விடுபட மணலில் குளித்திடும்.

மனல் குளியல்


தேனீத் தின்னிகள் கூடு அமைப்பது மண் சரிவுகளில்.  அவை எலி வளை போன்ற பொந்து செய்து அதில் கூடு கட்டும்.

இயற்கையின் எழிலில்தான் இறைவன் நாம் பார்த்து ரசிக்க                                                      
எத்தனை காட்சிகளை அளித்துள்ளான் ! 
                                   
 (முதல் இரண்டு படங்கள் சுதீர் ஷிவ்ராம் எடுத்தவை. மூன்றாவது விக்கிபீடியா தளத்தில் இருந்து)


                     நடராஜன் கல்பட்டு


                     

1 comment:

  1. ஆஹா! அறிய செய்திகள் ஐயா, தெரிந்துக்கொண்டேன்.

    தலைப்பு என்கிற இடத்தில் தலைப்பை சேர்க்கவும், லேபிள்கள் சேர்க்கவேண்டும், உங்களுடைய பதிவுகள் அனைத்தும் தலைப்பிடாதது என்றே வருகிறது. அதை கொஞ்சம் சரி செய்யவேண்டும் ஐயா.

    ReplyDelete