இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (28) முனியா
முனியா என்றதும் நான் யாரையோ கூப்பிடுவதாக நினைத்து
விடாதீர்கள். ஆங்கிலத்தில் ‘Munia’ என்பது ஒரு பறவை. சிட்டுக் குருவியை விட சிறியது. தேன் சிட்டை விட உருவத்தில் சற்றே
பெரியது.
நம் நாட்டிலேயே ஐந்தாறு வித முனியாக்கள் உள்ளன. அவை:
1. நெல்லுக்
குருவி என்றழைக்கப் படும் கருப்பு தலை கொண்ட முனியா (Black-headed munia),
2. சிவப்பு
ராட்டினம் என்ற பெயர் கொண்ட சிவப்பு முனியா (Red munia),
3. பொரி
ராட்டினம் என்றழைக்கப் படும் புள்ளி முனியா (Spotted munia).
http://www.finchworld.com/spice.html
4. வெள்ளை ராட்டினம் எனப் பெயர் கொண்ட வெள்ளை
முதுகுகொண்ட முனியா(White-backed munia),
5. வாயலாட்டான் அல்லது வெள்ளி மூக்கான் என்றழைக்கப் படும் வெள்ளைத் தொண்டை
முனியா (White-throated munia).
6. கருப்புத் தொண்டை கொண்ட முனியா (Black-throated Munia)
முனியாக்கள் கிட்டத்தட்ட வருடம் பூராவுமே இனப்
பெருக்கம் செய்யும். அவை புல் வைக்கோல்
இவற்றைக் கொண்டு பந்து போன்ற கூட்டினை அமைக்கும்.
பந்துக்குள் நுழைய பக்க வாட்டில் ஒரு வட்ட வடிவ நுழை வாயில் அமைகப் பட்டிருக்கும்.
தானியங்களைத் தின்று வாழும் இந்தப் பறவைகள், கூட்டம்
கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை. சிட்டுக்
குருவிகளைப் போல் அல்லாது இவற்றைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்க்க
முடியும். இந்தத் தகுதியே இதன் முதல் எதிரி.
வனவிலங்குப் பாதுகாபு சட்டம் அமூலில் இருக்கிறதோ
இல்லையோ பறவைகள் விற்கும் கடைகளில் அதிக அளவில் முனியாக்களைப் பார்க்கலாம்.
இந்தப் பறவைக்கு மற்றொரு எதிரியும் உண்டு. அதுதான் சில நிலக்கரி சுரங்கங்கள். இந்த அழகிய பறவைக்கும் நிலக்கரிக்கும் என்ன
சம்பந்தம் என்று கேட்கிறிர்களா? இருக்கிறது
சம்பந்தம்.
நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்த பின்
அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷ வாயு இருக்கிறதா என்று
கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வார். முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டாலோ அல்லது
உயிர் விடும்போல் தோன்றினாலோ உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்கள்.
பின்னர் குழாய்கள் மூலம் வெளிக் காற்றினை
சுரங்கத்திற்குள் செலுத்தி விஷ வாயுவை வெளி ஏற்றுவார்கள். நாம் உயிர் பிழைப்பதற்காக பாவம் இந்தப் பறவைகள்
உயிர் விட வேண்டும்! இம் முறை ஐம்பதுகளில் பழக்கத்தில் இருந்து
வந்தது. தற்போது மின் அணு நுண் கருவிகள்
முனியாவின் வேலையை எடுத்துக் கொண்டிருக்கலாம்.
முனியாவைப் பார்க்கும் போதெல்லாம், “மூர்த்தி சிறிதானாலும்
கீர்த்தி பெரிது”
என்று எனக்குத் தோன்றும். நாம் கண்டு
களிக்க இறைவன் எப்படியெல்லாம் காட்சி யளிக்கிறார்!
நடராஜன் கல்பட்டு
It appears u r a professional bird watcher..an ornithologist.
ReplyDeletesubbu thatha.
www.subbuthatha.blogspot.in
I am neither. I am just a bird lover who has had the good fortune of photographing some of them and in the process had the good fortune of seeing them at close quarters.
Deleteஇது என்ன அயோக்கியத்தனம்! மனுஷன தவற மத்த உயிரெல்லாம் கீழானதா? விஷ வாயு இருக்கானு தெரிஞ்சுக்க இந்த குருவியதான் கொண்டு வரணுமா, வேற எந்த கருவிகளும் இல்லியா?
ReplyDeleteமத்த உயிர்கள கீழ்த்தரமா நெனைக்கற வரைக்கும் மனுஷன் உருப்பட முடியாது!
Ram
When I read your good article I remembered about one Mr. M. Krishnan, the great writer and wild life photographer. He was equal to Dr. Salim Ali of Bombay those days. I do hope you have read the books of Mr. M. Krishnan.
ReplyDelete"Mandakol Manian"